The News Sponsor By


20,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ள ஏர் கனடா - ஆட்டிப்படைக்கும் COVID-19 தொற்றுநோய்! Thedipaar
 Canada

20,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ள ஏர் கனடா - ஆட்டிப்படைக்கும் COVID-19 தொற்றுநோய்!

 16.05.2020

மான்ட்ரியல் நகரை தலைமையிடமாக கொண்டது, ஏர் கனடா விமான நிறுவனம். கொரோனா அச்சுறுத்தலால், தனது அமெரிக்க மற்றும் சர்வதேச விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

COVID-19 தொற்றுநோய் தொடர்ந்து விமானத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் ஏர் கனடா குறைந்தது 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஜூன் 7 முதல் மேற்கொள்ளப்படும் பணிநீக்கங்கள், நிறுவனத்தின் 38,000 ஊழியர்களை பாதிக்கும் என்று கூறியுள்ளது.

பணி நீக்கத்தின் ஒரு பகுதியாக, ஏர் கனடா விமான பணிப்பெண்களை வேலை நாட்களை குறைக்கும்படி கேட்கும், இரண்டு ஆண்டுகள் வரை விடுப்பில் செல்லலாம் அல்லது பயண சலுகைகளுடன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்திலேயே தனது பணியாளர்கள் 3 ஆயிரத்து 600 பேர், விமான உதவியாளர்கள் 1,549 பேர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்துள்ளது. விமான சேவை மீண்டும் தொடங்கிய பிறகு, அவர்கள் பணிக்கு திரும்பலாம் என்று கூறிய நிலையில், தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



News Subscription




Comments:-