The News Sponsor By


கொரோனாவிற்கு கனடா மருந்து - நோயாளிகளுக்கு அளிக்க பிரதமர் அனுமதி! Thedipaar
 Canada

கொரோனாவிற்கு கனடா மருந்து - நோயாளிகளுக்கு அளிக்க பிரதமர் அனுமதி!

 18.05.2020

கனடாவின் மருந்து வெற்றிகரமானதாக அமைந்தால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து விநியோகமும் செய்வோம் என பிரதமர் ஜஸ்டின் அறிவித்துள்ளார்.

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்க அரசு ஒப்பதல் அளித்திருக்கிறது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை மருத்துவமனை பயன்பாட்டுக்கு அனுமதித்திருப்பதாக அறிவித்தார்.

டல்ஹவுசி பல்கலைக்கழக மருத்துவமனையில் இந்த மருந்தை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

"இந்த மருந்து வெற்றிகரமானதாக அமைந்தால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து விநியோகமும் செய்வோம்" எனவும் பிரதமர் ஜஸ்டின் கூறியிருக்கிறார்.

"ஆராய்ச்சியில் முன்னேற்றம் காண்பதற்கு நீண்ட காலம் ஆகும். அதைச் சரியாகச் செய்யவேண்டும். இருப்பினும், இப்போது வந்திருக்கும் செய்தி நம்பிக்கைக்குரியது." என்று ட்ரூடோ குறிப்பிட்டார்.



News Subscription




Comments:-