The News Sponsor By


கனடாவில் 79 ஆயிரத்தை கடந்த கொரோனா வைரஸ் தாக்கம் - இறப்பு விகிதம் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 15.4 ! Thedipaar
 Canada

கனடாவில் 79 ஆயிரத்தை கடந்த கொரோனா வைரஸ் தாக்கம் - இறப்பு விகிதம் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 15.4 !

 20.05.2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா பரவும் வேகமும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்னிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 50 லட்சத்து 3 ஆயிரத்து 170 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 27 லட்சத்து 6 ஆயிரத்து 483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 400 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

இந்த கொடிய வைரசில் இருந்து 19 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவை பொறுத்த வரைக்கும் 79,112 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 5,912. 40,050 பேர் குணமடைந்துள்ளனர். 33,150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 502 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கனடாவை பொறுத்தவரையில், ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 15.4 என்ற அளவில் இறப்பு விகிதம் உள்ளது.

அமெரிக்காவில், ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 26.6 மரணங்களும், இங்கிலாந்தில் 52.1 மரணங்களும், இத்தாலியில் 52.8 மரணங்களும், ஸ்பெயினில் 59.2 மரணங்களும், பிரான்ஸ் நாட்டில் 41.9 மரணங்களும் நடந்துள்ள நிலையில், கனடா உரிய நேரத்தில் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதுதான் இதற்கு காரணம்.



News Subscription




Comments:-