The News Sponsor By


சில்லறை விற்பனை வணிகங்களை மீண்டும் திறப்பது COVID-19 பரவல் அதிகரிப்புக்கு வழி வகுக்கும் - பீல் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி! Thedipaar
 Canada

சில்லறை விற்பனை வணிகங்களை மீண்டும் திறப்பது COVID-19 பரவல் அதிகரிப்புக்கு வழி வகுக்கும் - பீல் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி!

 21.05.2020

புதன்கிழமை பிராம்ப்டன் சிட்டி ஹாலில் வாராந்திர மாநாட்டின் போது பீல் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் லாரன்ஸ் லோ சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். 

ஒன்ராறியோவில் ஒட்டுமொத்தமாக COVID-19 இன் புதிய வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற நிலையில், பீல் பிராந்தியத்தில் தாக்கம் உயர்ந்துள்ளதாக கூறினார்.

கடந்த வாரத்தில், ஒன்ராறியோவில் பதிவான புதிய வழக்குகளில் 20 சதவிகிதம் பீல் பிராந்தியத்தில் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். ஆனால் இப்பகுதியில் மாகாணத்தின் மக்கள் தொகையில் வெறும் 10 சதவிகித மக்கள்  மட்டுமே உள்ளனர் என்பதை நினைவுகூற வேண்டும்.

பீல் பிராந்தியத்தில் 3,711 உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 வழக்குகளில் இதுவரை 229 பேர் இறந்துள்ளனனர். ஏப்ரல் 18 அன்று 190 பதிவுகள் பதிவாகியதிலிருந்து ஒவ்வொரு நாளும் பதிவாகும் புதிய வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், அவை நிலையாக  50 முதல் 100 புதிய வழக்குகள் நிலையாக பதிவாகி வருகிறது.

மாகாணத்தால் சில துறைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், குறைந்தது மே 25 வரை விளையாட்டுத் துறைகள் மூடப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் சில்லறை விற்பனை வணிகங்களை மீண்டும் திறப்பது, பீல் பிராந்தியத்தில் கொரோனா மேலும் பரவுவதற்கு வழிவகுக்கும் என்று டாக்டர் லாரன்ஸ் லோ தெரிவித்துள்ளார்.


News Subscription




Comments:-