The News Sponsor By


மேற்குவங்கத்தில் அம்பன் புயல் தாக்கத்தினால் 72 பேர் பலி. Thedipaar
 India

மேற்குவங்கத்தில் அம்பன் புயல் தாக்கத்தினால் 72 பேர் பலி.

 21.05.2020

மேற்குவங்கத்தில் அம்பன் புயல் தாக்கத்தினால் 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 2.5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான அம்பன் சூறாவளி மேற்குவங்கத்தின் கடல் பகுதி மட்டுமின்றி வங்கதேசத்தின் கடல் பகுதி வழியாக கரையை கடந்தது.


புயல் கரையை கடந்த பகுதி சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட இடமான மேற்குவங்கத்தில் அம்பன் புயல் கரையை கடந்தபோது கடும் சூறாவளி காற்று வீசியது.


மேற்குவங்க கடலோராத்தில் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பியதாகவும் இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் 5 இலட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


மேலும் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகிறோம் என்றும் மரங்கள் விழுந்ததும், வீடுகள் இடிந்து விழுந்ததும், மின்சாரம் தாக்கியுமே பலர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


News Subscription




Comments:-