The News Sponsor By


கார்த்திக் டயல் செய்த எண் – VTV 2 Thedipaar
 Cinema

கார்த்திக் டயல் செய்த எண் – VTV 2

 22.05.2020

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத் தாண்டி வருவாயா? படத்தை இலகுவில் யாரும் மறந்து விட முடியாது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்த அந்த திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் இளையவர்கள் மத்தியில் பிரபல்யம்.

இந்நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்தான பேச்சுக்கள் அண்மைய நாட்களாக பேசப்பட்ட நிலையில், ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற தலைப்பில் குறும்படமாக ஒரு காட்சியை வெளியிட்டிருக்கின்றார் இயக்குனர்.

இந்த கொரோனா காலத்தில் 10 வருடத்திற்கு முன்பு பிரிந்த காதலர்கள் மீண்டும் பேசினால், என்ன பேசுவார்கள்? என்பதை கனகச்சிதமாக ஐபோன் துணை கொண்டு படம்பிடித்து அசத்தியிருக்கின்றார் இயக்குனர் கௌதம் மேனன்.

இரண்டு லொகேஷன்ஸ், இரு கேரக்டர் என ரஹ்மான் இசையின் துணையுடன், அன்டனியின் எடிட்டில் அசத்தலான குறும்படமாக அதனை காலத்திற்கேற்ப மெருகூட்டி தந்திருக்கின்றார் இயக்குனர்.

10 வருடங்களாகியும் விண்ணைத்தாண்டி வருவாயா? படத்தின் பாதிப்பில் இருந்து வெளிவராத பலர் அதனை சமூக வலைத்தளங்களில் ஷெயார் செய்து கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் முடிந்ததும், இக்காட்சியும் உள்ளடங்கியதாக விண்ணைத் தாண்டி வருவாயா? – பார்ட் 02 வெளிவருமா? என்பதே இப்போது சிம்பு – கௌதம் ரசிகர்களின் கேள்வியாக இருக்கின்றது.


News Subscription




Comments:-