The News Sponsor By


இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,584 ஆக உயர்வு Thedipaar
 India

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,584 ஆக உயர்வு

 22.05.2020

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 584 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று மட்டும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 150 பேர் மரணித்துள்ளனர்.

ஏனைய உலக நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று மேலும் 571 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 659 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 3 நாட்களாக டெல்லியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 500க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளதுடன், 66 ஆயிரம் பேரளவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்படுகிறது.


News Subscription




Comments:-