The News Sponsor By


பாகிஸ்தான் பயணிகள் விமானம் விபத்து. Thedipaar
 World

பாகிஸ்தான் பயணிகள் விமானம் விபத்து.

 22.05.2020

பாகிஸ்தான் பயணிகள் விமானம் விபத்து.


பாகிஸ்தானில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 100 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.


லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்ற பாகிஸ்தான் சர்வதேச எயார்லைன்ஸ் விமானமான ‘ஏ -320’ விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த விமானத்தில் பயணித்த ஏறக்குறைய 100 பயணிகளின் நிலைக் குறித்து அறிவதற்காக, தற்போது மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு, மாடல் காலனிக்கு அருகிலுள்ள பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


மாடல் காலனி என்பது கராச்சியில் ஜின்னா சர்வதேச விமான நிலையத்திலிருந்து வடகிழக்கில் இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ளது.


உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட செய்தியில், விபத்து நடந்த இடத்திலிருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் எழும் காட்சிகள் தெளிவாக தெரிகின்றன.


இணைப்பு செய்தி


விபத்துக்குள்ளான பாகிஸ்தான் பயணிகள் விமானத்தில், 91 பயணிகள் மற்றும் எட்டு விமான பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் சிலர் உயிருடன் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.


மக்கள் அடர்த்தியான குடியிருப்பு பகுதியில் குறித்த விமானம் வீழ்ந்ததனால், அப்பகுதியில் வசித்த மக்கள் சிலரும் பாதிப்படைந்துள்ளனர்.


அங்கிருந்துவரும் செய்திகளின் படி, அப்பகுதியில் வசிப்பவர்கள் 25 பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.


அத்துடன், கராச்சியின் அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.


News Subscription




Comments:-