The News Sponsor By


திருடப்பட்ட படகை மீட்கும் முயற்சியில், 90,000 டாலர் மதிப்பிலான கஞ்சாவையும் மீட்ட காவல்துறையினர்! Thedipaar
 Canada

திருடப்பட்ட படகை மீட்கும் முயற்சியில், 90,000 டாலர் மதிப்பிலான கஞ்சாவையும் மீட்ட காவல்துறையினர்!

 25.05.2020

2016 ஆம் ஆண்டு திருடப்பட்ட Kingfisher Destination 3025 ரக படகை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது, சட்ட விரோத கஞ்சா பயிரிடலை RCMP அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

படகிகை மீட்கும்போது, திருடப்பட்ட பிற பொருட்களின் ஆதாரங்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து மற்றொரு தேடல் வாரண்டைப் பெற்ற பின்னர், நடந்த தேடுதல் வேட்டையில்  1,200 கஞ்சா செடிகளை போலீசார் கண்டுபிடித்தனர்.


ஆர்.சி.எம்.பி.யின் கூற்றுப்படி, "அதிகப்படியான கஞ்சா தாவரங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு 90,000 டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது."

இந்த மோசடி தொடர்பில், Squamish Valley  குடியிருப்பாளர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது விசாரணை நிலுவையில் உள்ளது.


News Subscription




Comments:-