The News Sponsor By


வடமாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனல் காற்று. Thedipaar
 India

வடமாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனல் காற்று.

 25.05.2020

வடமாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனல் காற்று.


நாட்டின் வட மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்  என வானிலை ஆய்வுத்துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதன்படி பஞ்சாப்,  அரியானா,  சண்டிகர்,  டெல்லி,  ராஜஸ்தான்,  உத்தரப்பிரதேசம்,  மத்தியப்பிரதேசம்,  தெலங்கானா,  மகாராஷ்டித்தின் விதர்ப்பா ஆகிய பகுதிகளில் நான்கு நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஒரு சில இடங்களில் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.


தென்மேற்குப் பருவமழை ஆரம்பமாவதற்கு முன்  வடமாநிலங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை நிலவுவதுடன் அனல்காற்று வீசுவது வழக்கம்.


இருப்பினும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை ஆய்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.


News Subscription




Comments:-