The News Sponsor By


இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,206. Thedipaar
 Srilanka

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,206.

 26.05.2020

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,206. 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், இதுவரை (26.05.2020 - மாலை 05.40) மொத்தமாக 1,206 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் இறுதியாக அடையாளங்காணப்பட்ட 07 பேரும் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தோர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அத்துடன் இன்று தற்போதுவரை அடையாளம் காணப்பட்ட 24 பேரும் குவைத் நாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 712 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 484 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 76 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 


அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


News Subscription




Comments:-