The News Sponsor By


Cornwall கடற் பகுதியிலிருந்து இரு சடலங்கள் கண்டெடுப்பு! Thedipaar
 World

Cornwall கடற் பகுதியிலிருந்து இரு சடலங்கள் கண்டெடுப்பு!

 26.05.2020

Cornwall கடற் பகுதியிலிருந்து இரு சடலங்கள் கண்டெடுப்பு!


கார்ன்வோல் (Cornwall)) கடற்பகுதியிலிருந்து கவிழ்ந்த படகின் அடியில் சிக்கிய ஒரு சிறுமியின் உடலத்தையும், தண்ணீரில் போராடிய மற்றொரு நபரின் உடலத்தையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.


பிரித்தானிய கோடை நேரமான 12:45 நேரப்படி, பேட்ஸ்டோவுக்கு அருகிலுள்ள டூம் பார் பகுதியில் ஊதப்பட்ட படகு கவிழ்ந்ததில் உயிர் தப்பிய மூன்று பேருடன் குறித்த சிறுமியும் ஒருவர்.


இந்த இரண்டு மரணங்களும் வங்கி விடுமுறையில் அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்ட பல சம்பவங்களில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம், பிரித்தானிய கடற்கரைகளில் ‘ரோயல் நேஷனல் லைஃப் போட் நிறுவனம்’ தனது ரோந்து படையை நிறுத்தப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.


மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிறுமி இறந்துவிட்டதாகவும், மேலும் ட்ரேயர்னான் விரிகுடாவில் தண்ணீரில் போராடிய நபர் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


‘உள்ளூர் அவசர சேவைகளுக்கு இது மிகவும் கடினமான நாள்’ என பொலிஸார் விபரித்துள்ளனர்.


News Subscription




Comments:-