The News Sponsor By


வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து மரணம். Thedipaar
 Srilanka

வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து மரணம்.

 26.05.2020

வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து மரணம்.


திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று காலை 11.00 மணியளவில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து மரணமானார்.


இறந்தவர் திருகோணமலை நிலாவெளி வீதி கேணியடி பிரதேசத்தைச்சேர்ந்த தங்கதுரை(வயது 68) என தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவ இடத்தில் இருந்து தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து ல்தலத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை நோயாளர் காவு வாகனம் முலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.


சடலம் தற்போது திருகோணமலை பொதுவைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலதிக விசாரணையை துறைமுகப் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.


News Subscription




Comments:-