The News Sponsor By
feature-top
feature-top

நிதி அமைச்சகமானது ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களின் விகிதத்தில் 30 புள்ளிகளை அதிகரித்து இருக்கிறது. எனவே போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்பு தொகை வட்டி 6.2% இருந்து 6.5% மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடம் பிப்ரவரி 1ஆம் தேதி போஸ்ட் ஆபீஸ் பிரான்சைஸ் ஸ்கீம் எனப்படும் புதிய செயல் திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கால அளவு 5 வருடங்கள். முதலீட்டாளர்கள் ஐந்து வருடத்தில் விரைவில் ஆறு லட்சம் சேமிப்பு பணத்தோடு ஒரு லட்சத்து 10 ஆயிரம் வட்டியையும் சேர்த்து 7,10,000 டெபாசிட் பணமாக பெறுவார்கள். முதலீட்டாளர்கள் தொடர் வைப்பு கணக்கை ஒன்றாம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் தொடங்கினால் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் சேமிப்பு தொகையை செலுத்த வேண்டும். 5 வருடத்திற்கு முன் சேமிப்பை மூடினால் சேமிப்பு கணக்கு வட்டியில் 4 சதவீதம் மட்டுமே கொடுக்கப்படும்.

feature-top
feature-top