The News Sponsor By


1 கிலோ, 50 கிராம் மான் இறைச்சியுடன் குடும்பஸ்தர் கைது. Thedipaar
 Srilanka

1 கிலோ, 50 கிராம் மான் இறைச்சியுடன் குடும்பஸ்தர் கைது.

 26.05.2020

1 கிலோ, 50 கிராம் மான் இறைச்சியுடன் குடும்பஸ்தர் கைது.


கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஆலங்கேணி பகுதியில் வைத்தியசாலைக்கு முன்னால் மான் இறைச்சியை கொண்டு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் இன்று (26) காலை கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த (வயது -37) குடும்பஸ்தர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ, 50 கிராம் மான் இறைச்சி கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இவர் அந்த மான் இறைச்சியை தான் ஒருவரிடம் இருந்து வாங்கி வருவதாக தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இது தொடர்பாக விசாரணையை மேற் கொண்டுள்ள பொலிஸார் திருகோணமலை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். 


News Subscription




Comments:-