The News Sponsor By
feature-top
feature-top

கர்நாடக மாநிலத்தில் கடாக் மருத்துவ அறிவியல் நிறுவனம் (GIMS) செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் சிலர், மருத்துவமனை வளாகத்திற்குள் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டதால் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அங்கிருக்கும் நோயாளிகள் பலரும் தங்கள் நோயால் அவதிப்பட்டு வரும் நிலையில், மருத்துவ மாணவர்கள் பொறுப்பற்ற முறையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் சுமார் 38 பேர் இந்தி மற்றும் கர்நாடக திரைப்படப் பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்து தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் மீது விசாரணை அமைக்கப்பட்டது. அப்போது அந்த மாணவர்கள் முறையான சரியான பதிலை தெரிவிக்கவில்லை என்பதால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, அந்த 38 மாணவர்களையும் 10 நாட்கள் இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக இதே கர்நாடகத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் Operation வார்டில் தனது Pre Wedding Photoshoot எடுத்தது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இப்போது அடுத்த மருத்துவ மாணவர்கள். மீடியா மோகம் யாரையும் விட்டுவைக்கவில்லை.

feature-top
feature-top